Sunday, December 28, 2008

பாம்பு சந்திரனை மூழிங்கிடுச்சு

இராகு , கேதுவை பற்றி ஆராந்தபின்புதான் நான் ஜோதிடத்தையே நம்ப ஆரம்பித்தேன்.
சூரியன் தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் போது , கனத்த அனுக்களெல்லாம் மையம் நோக்கி செல்லும்.இந்த அழுத்தம் காரணமாக அணுசிதைவு ஏற்பட்டு அவை மேலும் நெருக்கமுற்று சக்திவாய்ந்த காந்தக்களமாக மாறிக் கொண்டிருக்கிறது.
இதன் ஈர்ப்பு சக்தி பயங்கரமானது, ஒளியை கூட இழுத்துவிடும். ஒரு பொருளின் மீது ஒளி பட்டு திரும்பி வந்தால் தானே அது நம் கண்ணுக்கு தெரியும். அதனால் தான் இந்த கரும்புள்ளி (பிளாக் ஹோல்) கண்ணுக்குத் தெரியாது என்று விஞ்ஞானி ஸ்டிபன் ஹாகிங் கூறுகிறார்.
மேலும் அழுத்தம் அதிகரிக்கும் போது , இந்த கரும்புள்ளி சூரியனில் இருந்து இரண்டு காந்த அலை பாதைகளாக வெளியேரும் அது தான் ஒருபுறம் ராகு என்றும் மறுபுறம் கேது என்று சொல்கிறார்கள்.


எந்த ஜாதகத்திலும் போய் பாருங்கள் ராகு,கேது நேர் எதிராக தான் இருக்கும்.




இந்த ராகு , கேது காந்த அலைபாதைகளில் பூமியும், சந்திரனும் ஒரு நேரத்தில் வரும்போது கிரகணம் ஏற்படும்.அந்த காலத்தில் பாம்பு சந்திரனை மூழிங்கிடுச்சுனு சொன்னாங்க அது வேற ஒன்னும் இல்ல இந்த காந்த அலை பாதையை தான் சொன்னாங்க. அலைபாதைத்தான் பாம்பு என்று சொன்னார்கள். பாம்பு போலத்தானே இருக்கும்.

ஒவ்வொரு மாதமும் சூரியன்,பூமி , சந்திரன் நேர் கோட்டில் வரும் அப்போதெல்லாம் கிரகணம் வராது.சூரியனிடம் இருந்து வரும் காந்த அலை பாதையும் அதே நேர்கோட்டில் இருந்தால் தான் கிரகணம்.

உண்மையை சொல்லியிருந்தால் அந்த காலத்தில் யாரும் நம்பி இருக்க மாட்டார்கள்.இப்படி சொன்னதால் தான் பல தலை முறை தாண்டியும் அறிவியல் வந்து சேர்ந்திருக்கு. ஒவ்வொரு தலைமுறையிலும் சில மனிதர்கள் இந்த உண்மையை உணர்ந்திருப்பர்....

3 comments:

Math Larks 04 said...

அன்பரே!
உங்கள் கருத்தில் நான் ஐயமுற்றதற்ககாக வருந்துகிறேன். கதிரவன், நிலவு, பூமி இவை மூன்றும் நேர்கோட்டில் வரும்போது அறிவியல் படி கிரகணம் ஏற்படும். இதில் விதிவிலக்கு கிடையாது. ஆனால் நாம் கருதுவ்ஹிறது போல் இம்முன்றும் ஒவ்வொரு நிலவு பூமியை சுற்றும்போதோம் ஏற்படுவதில்லை. இதற்கு காரணம் பூமியும் நிலவும் ஒரே தளத்தில் சுழல்வது இல்லை. பூமி கதிரவனை சுற்றும் தளத்திற்கு சிறிது சாய்வான தளத்திலேயே நிலவு பூமியைச்சுற்றுகிறது. இவைகள் ஒரே தளத்தில் இருக்கும்போது தான் ஒரே நேர்கோட்டில் வர இயலும். இவ்வாறு ஒரே தளத்தில் வருவதும் அதச்சமயம் ஒரே நேர்கோட்டில் இருப்பதும் அத்திபூப்பது போன்றதே. ஆனால் எளிய கணிததாலேயே கணித்துவிடமுடியும். தவறிருந்தால் கண்டிப்பாய் விளக்கவும்.

ஜானகிராமன் said...

//இவ்வாறு ஒரே தளத்தில் வருவதும் அதச்சமயம் ஒரே நேர்கோட்டில் இருப்பதும்//

இந்த காந்த அலைகளை மையமாக வைத்து தான் சந்திரன், தளத்தில் இருந்து மேலும் கீழுமாக போய்கொண்டே சுழழ்கிறது,,

Math Larks 04 said...

ஒரு வேளை நான் சரியாக வினவவில்லை என்று நினைக்கிறேன். உலகம் கதிரவனை y அச்சை குத்துககோடாக கொண்ட ஒரு தளத்தில் சுழல்வதாக கொள்வோம். அதே சமயம் நிலவு சற்றே சாய்ந்த தளத்தில் சுழல்வதாக கொள்வோம். (மேற்கண்ட கருதுகோள்கள் ஏற்கனவே உறுதிப் படுத்தப் பட்டுவிட்டன). இப்பொழுது இந்த தழங்கள் எங்கு வெட்டிக் கொள்கின்றனவோ அந்தக் கோட்டில் நிலவு இருந்தால் தான் கிரகணங்கள் ஏற்படும். மேலும் அதே சமயம் கதிரவன் உலகம் இரண்டையும் இணைக்கும் கோட்டிலும் இருக்க வேண்டும்.

//...ஒவ்வொரு மாதமும் சூரியன்,பூமி , சந்திரன் நேர் கோட்டில் வரும் அப்போதெல்லாம் கிரகணம் வராது.சூரியனிடம் இருந்து வரும் காந்த அலை பாதையும் அதே நேர்கோட்டில் இருந்தால் தான் கிரகணம்....//

ஒவ்வொரு மாதமும் கதிரவன் நிலவு உலகம் மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதில்லை. ஒருவேளை மேலிருந்து எடுக்கப்பட்ட இருபரிமாண படத்தில் அவைகள் ஒரு கோடமைவனவாக இருந்தாலும் பக்கவாட்டு அல்லது முன்பக்கத்திலிருந்து எடுக்கப்படும் படங்களில் அவை ஒருதளத்தில் அமைவதில்லை. அதாவது முப்பரிமாணத்தில் பார்க்கும் போது அவை ஒரே தளத்தில் அமையாது. அங்ஙனம் முப்பரிமாணத்தில் ஒரு நேர்கோட்டில் வரும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன.

//இந்த காந்த அலைகளை மையமாக வைத்து தான் சந்திரன், தளத்தில் இருந்து மேலும் கீழுமாக போய்கொண்டே சுழழ்கிறது,,//

நிலவு தளத்திலிருந்து மேலும் கீழுமாக செல்வதில்லை அது இன்னொரு தளத்தில் சுழல்கிறது.

மேலும் கருந்துழை காந்த அலைகள் பாம்பு போன்ற பாதையை கொண்டிருக்கிறது அனும கூற்றை விளக்கும் கட்டுரையையும் நாங்கள் அறியும்படி செய்தால் மிகுந்த நன்றிக்கு பாத்திரவான் ஆவீர்கள்.

விளக்கத்தை எதிர்பார்த்து முடிக்கும்,
ம. ஜாண் ரூபட்.